தமிழ்நாட்டு மக்கள் இனி மலேசியாவுக்கு எளிதாக சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு - சென்னைக்கும், மலேசியாவில் உள்ள பினாங் நகருக்கும் இடையே நேரடி விமான சேவை டிசம்பர் 21ம் தேதி முதல் தொடக்கம் !!

Update: 2024-11-25 06:44 GMT

 இண்டிகோ

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கியமாக விமான பயணங்களைச் சொல்லலாம். இந்தியர்களும் முன்னெப்போதையும் விட அதிகளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் பல விமான நிறுவனங்கள் பல புதிய நகரங்களுக்கு தங்கள் சேவையைத் ஆரம்பம் ஆகி உள்ளது.

இதற்கிடையே சென்னைக்கும், மலேசியாவில் உள்ள பினாங் நகருக்கும் இடையே நேரடி விமான சேவையை டிசம்பர் 21ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மலேசியாவின் இரு நகரங்களுக்கு நேரடி விமான சேவை உள்ள நிலையில் மூன்றாவது நகரமாக பினாங்கை இணைத்துள்ளது இண்டிகோ. இந்த நேரடி விமானங்கள் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வர்த்தக உறவுகளையும் மேம்படுத்தும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பினாங்குக்கு தினசரி, இடைநில்லா விமானங்கள் தொடங்கப்பட்டதன் மூலம், மலேசியாவில் எங்கள் நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இண்டிகோ இனி இந்தியாவில் இருந்து மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பினாங்குக்கு 28 வாராந்திர விமானங்களை இயக்கும்" என்று இண்டிகோ குளோபல் சேல்ஸ் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

வளர்ந்து வரும் லங்காவி மற்றும் பினாங்கு போன்ற இடங்களை இணைப்பதில் இண்டிகோவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதை தொழிலதிபர்கள் தங்கள் வியாபார நோக்கத்திற்காகவும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் எங்கள் விரிவான நெட்வொர்க் மூலம் விலை குறைவான, சரியான நேரத்தில் செல்லக்கூடிய, நம்பிக்கைக்குரிய மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்க இண்டிகோ உறுதிபூண்டுள்ளது என்று மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

Tags:    

Similar News