டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை - 5000 பேருக்கு வேலை !!

Update: 2024-09-16 10:30 GMT

டாடா மோட்டார்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை, ரூ.9000 கோடி செலவில் இராணிப்பேட்டை நகரில் அமைகிறது. இந்த தகவல் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் டாடா மோட்டார்ஸ் சார்பில், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையானது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அமைகிறது. ரூ.9000 கோடி செலவில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையும் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 28ம் தேதி அடிக்கல் நாட்டி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிறுவனத்தின் வாயிலாக சுமார் 5000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் ரூ.400 கோடி செலவில், 250 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மெகா காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

டாடா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் இயந்திரங்கள் உற்பத்தி பிரிவான டாடா மோட்டார்ஸ், பல்வேறு ரக கார்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுத்தி வருகிறது. இந்திய சந்தைகள் மட்டுமல்லாது அயல்நாட்டு சந்தையிலும் முன்னணி பெற்றுள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் ஜாகுவார் கார் உற்பத்தி மையம், ராணிப்பேட்டையில் அமைவது தமிழர்களின் வேலைவாய்ப்பை பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News