டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் வெளியீடும் 600 கி.மீ. ரேஞ்ச் டாடா எலெக்ட்ரிக் கார் !!

Update: 2024-07-31 07:26 GMT

டாடா கர்வ் EV

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தனது புது எலெக்ட்ரிக் கார் டாடா கர்வ் EV-யை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

டாடா கர்வ் EV பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.

புதிய கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும். இந்த சன்ரூஃபின் டபுள் பேனல் உட்புறப் பிரிவின் இருபுறமும் சுற்றுப்புற விளக்குகளை கொண்டிருக்கிறது.

இத்துடன் 4-ஸ்போக் டூயல்-டோன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கருப்பு மற்றும் பழுப்பு நிற உட்புற தீம், ஏசி செயல்பாடுகளுக்கான தொடுதிரை கட்டுப்பாடுகள், குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை கொண்டுள்ளது.

கர்வ் எலெ்க்ட்ரிக் மாடலில் LED விளக்குகள், டூயல்-டோன் அலாய் வீல்கள், சாய்வான கூரை, LED லைட் பார்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய 12.3-இன்ச் தொடுதிரை போன்ற அம்சங்களைப் பெறுகிறது.

மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 2024 கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வருகிறது. ஒன்று 40.5kWh யூனிட்டாகவும் மற்றொன்று 55kWh யூனிட்டாகவும் இருக்கும்.

Tags:    

Similar News