1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் ஹூண்டாயின் "குட்டி கார்"
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கேஸ்பர் பெயரை பயன்படுத்துவதற்காக காப்புரிமை பெற்று இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது கேஸ்பர் என்ட்ரி லெவல் எஸ்யூவி மாடலை தென்கொரியா சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
புதிய ஹூண்டாய் கேஸ்பர் மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்டர் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும். வாகனங்களின் பெயர்களை காப்புரிமை பெற்றுக் கொள்வதை ஆட்டோ மொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு காப்புரிமை பெறுவதால் அந்த கார் குறிப்பிட்ட சந்தையில் கட்டாயம் அறிமுகமாகி விடும் என்றும் கூறி விட முடியாது.
தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலின் அளவிலேயே ஹூண்டாய் கேஸ்பர் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் அளவில் 3595 mm நீளம் 1595 எம் எம் நகலம் 1575mm உயரம் மற்றும் 2400mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த கார் எக்ஸ்டர் மாடலை விட 220mm வரை நீளம் குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ மற்றும் கிராண்ட் i10 நியோஸ் மாடலை போன்ற பிளாட்பார்மிலேயே புதிய கேஸ்பர் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றது