யமஹா நிறுவனத்தின் ரிலீசுக்கு ரெடியாகும் RX100 !!!

Update: 2024-05-06 06:50 GMT

யமஹா  RX100

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார் சைக்கிள் RX 100 இந்திய சந்தையில் அதிக பிரபலமாக விளங்கிய RX 100 மோட்டார் சைக்கிள் புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலும் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யமஹா Rx100 புதிய மாடல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.


லீக் ஆகி இருக்கும் புகைப்படத்தின் படி புதிய RX100 மோட்டார் சைக்கிளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ,மொபைல் கனெக்டிவிட்டி ,மொபைல் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

புதிய RX100 மாடலில் 225 சிசி பி. எஸ் 6 பேஸ் 2 இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 20 ஹெச்.பி. பவர் 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய யமஹா RX 100 விலை இந்தியாவில் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் முதல் துவங்கும் என்று தெரிகிறது.

இந்த பைக்கின் செயல் திறன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இது விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய யமஹா ஆர்எக்ஸ் 100 அம்சங்கள் மற்றும் வெளியீடு தொடர்பாக சமீபத்தில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News