iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்யும் TVS !

Update: 2024-05-23 11:52 GMT

iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரம்பை TVS iQube-ன் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வகையிலான பேஸ் வேரியண்ட் மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் ST டிரிம்-ஐ அறிமுகப்படுத்தி iQube லைன்அப்-ஐ டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

இதில் மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள TVS iQube-ன் புதிய பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,999 ஆகும். இதில் EMPS மானியம் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை அடங்கும். இது ஜூன் 30, 2024 வரை செல்லுபடியாகும். iQube-ன் புதிய பேஸ் வேரியன்ட்டில் சிறிய பேட்டரி பேக்கை வழங்கி உள்ளதன் மூலம், குறைந்த விலையில் TVS iQube-ஐ நிறுவனம் மார்க்கெட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

Advertisement

அனைத்து iQube மாடல்களிலும் ஒரே மாதிரியான அன்டர்பின்னிங்ஸ் மற்றும் சைக்கிள் பார்ட்ஸ்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு tubular ஃப்ரேமை பயன்படுத்துகிறது, முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 12-இன்ச் அலாய் வீல்ஸ் உள்ளன. பிரேக்கிங்கிற்காக இதில் ஒரு ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக் மற்றும் ரியர் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளன.

iQube-ன் ஸ்டாண்டர்ட் மாடலானது ஃபுல்-LED இலுமினேஷன், எகானமி மற்றும் பவர் என்ற 2 ரைட் மோட்ஸ், பார்க் அசிஸ்ட் மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனுடன் 5 இன்ச் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறான அல்லது ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலல்லாமல், TVS iQube மாடலானது ICE-பவர்ட் ஸ்கூட்டரைப் போலவே மிகவும் எளிமையான லுக்கில் உள்ளது. 

Tags:    

Similar News