2024 அக்டோபர் மாதத்தில் TVS மோட்டார் நிறுவனம் வெளயிட்ட விற்பனை தரவுகள் !!

Update: 2024-11-06 08:40 GMT

TVS மோட்டார் நிறுவனம்

இந்தியாவில் பண்டிகை காலம் முடிவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் முன்னனி இரு சக்கர உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ், தனது பைக் விற்பனை தரவுகளை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் வாகனம், எலக்ட்ரிக் வாகனம் என எல்லாவித பிரிவிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது.

45% வளர்ச்சியுடன் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில், டிவிஎஸ் (TVS) மோட்டார் நிறுவனம் 2024 அக்டோபர் மாதத்தில் மட்டும் 4,89,015 பைக்குகளின் மாதாந்திர விற்பனையை பதிவுசெய்துள்ளது. முன்பு செய்த விற்பனையை விட சாதனை விற்பனையாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனையான 4,34,714 பைக்குகளை விட இது 14 சதவிகிதம் வளர்ச்சி ஆகும்.

ஒட்டுமொத்தமாக இரு சக்கர வாகன விற்பனை வளர்ச்சி 2023 அக்டோபர் மாதத்தில் 420,610 யூனிட்களாக இருந்தது, 14 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து 2024 அக்டோபர் மாதத்தில் 478,159 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை வளர்ச்சியும் 2023 அக்டோபர் மாதத்தை விட, 2024 அக்டோபர் மாதத்தில் 13 சதவிகிதம் வளர்ச்சி கண்டு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் வளர்ச்சியும் 2023 அக்டோபர் மாதத்தை விட 2024 அக்டோபர் மாதத்தில் 14 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.ஸ்கூட்டர் விற்பனையில் 17 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தைப் பொறுத்தவரை 45 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அக்டோபர் 2024-ல் டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த பைக் ஏற்றுமதி 9 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. டூ-வீலர் ஏற்றுமதியை பொறுத்தவரை, 16 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது.

TVS மோட்டார் நிறுவனம் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அமைந்துள்ள நான்கு அதிநவீன உற்பத்தி ஆலைகள் மூலம் நீடித்த வளர்ச்சியை பெற்று வருகிறது.

Tags:    

Similar News