XL எலெக்ட்ரிக் வெர்ஷனை களமிறக்கும் டி.வி.எஸ். நிறுவனம் !!

Update: 2024-10-26 11:20 GMT

டி.வி.எஸ்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டி.வி.எஸ். நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டம் செய்துள்ளது . அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் டி.வி.எஸ். தனது புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிவித்துள்ளது. இது பற்றி தகவல் சமீபத்திய முதலீட்டாளர் சந்திப்பின் போது வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எக்ஸ் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. டி.வி.எஸ். எக்ஸ் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் கவர்ச்சிகரமாக உள்ளது எனவும் இது விற்பனையில் அமோக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளையும் டி.வி.எஸ். துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

இதில் ஜூப்பிட்டர் அல்லது XL எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் ஒன்றை டி.வி.எஸ். முதலில் அறிமுகம் செய்யும் என்று தெரிவித்துள்ளது. இதில் XL எலெக்ட்ரிக் மாடல் வணிக பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டி.வி.எஸ். நிறுவனம் XL EV மற்றும் E-XL பெயர்களை புதிய மாடலுக்கு சூட்ட டிரேட்மார்க் செய்துள்ளது.

Tags:    

Similar News