Nexon EV மற்றும் Tiago EV கார்களின் விலை குறைவு என அறிவித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காரணம் என்ன....
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Nexon EV மற்றும் Tiago EV கார்களின் விலை அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல் மின்சார வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ.1,20,000 வரை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மின்சார வாகனங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பேட்டரி செல்களின் விலை சரிந்துள்ளதால் கார்களின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மின்சார கார்களின் விலை குறைப்பு குறித்து டாடா நிறுவனத்தின் பயணிகள் மின்சார வாகன பிரிவின் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா, மின்சார வாகனத் தயாரிப்பில் ஒட்டுமொத்த செலவில் பேட்டரி செலவுகள் கணிசமான பங்கைக் கொண்ட நிலையில் தற்போது பேட்டரி செல்களின் விலை மெதுவாக குறைந்து வருவதால் காரின் விலையை குறைத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த பேட்டரின் விலை சரிவின் பயணை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, மின்சார வாகனங்களின் விலையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில் கார் வாங்கும் திட்டம் வைத்திருப்பவர்களை இந்த விலை குறைப்பு கார் மகிழ வைக்கும் என தெரிவித்துள்ளார்