இந்தியாவில் அறிமுகமான கைனடிக் லூனா 110 கிமீ ரேன்ஜ் தருமா ? பார்க்கலாம் வாங்க
முக்கியமாக இந்த ஸ்கூட்டர் குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் செல்லும். கைனடிக் லூனா மாடல்- ரெட், எல்லோ, பிளாக், புளூ மற்றும் கிரீன் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த நிலையில் புதிய கைனடிக் லூனா ஸ்கூட்டரின் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லூனா எலெக்ட்ரிக் மாடலின் தோற்றம் அதன் பழைய மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் மெல்லிய தோற்றத்தை வழங்கும் வகையிலும், குறைந்த எடை கொண்டிருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதில் 1.2 கிலோவாட் மோட்டார் மற்றும் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றுள்ளது.