இந்தியாவில் களமிறங்கும் வின்பாஸ்ட்!!!

Update: 2024-02-29 11:57 GMT

புதிய வின்பாஸ்ட் VF3 

புதிய வின்பாஸ்ட் VF3 மாடல் இந்திய சந்தையில் எம்.ஜி. கொமெட் EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. வின்பாஸ்ட் VF3 மாடல் 3190mm நீளம், 1678mm அகலம், 1620mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் (இருக்கையின் பின்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பகுதி) மட்டும் 550 லிட்டர்கள் ஆகும். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

வின்பாஸ்ட் VF3 எலெக்ட்ரிக் மின் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.VF3 மாடல்- இகோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் கிளஸ்டர், மல்டி ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், 2-ஸ்போக் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News