இளைஞர்களை கவர்ந்த யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் அப்டேட்ட பார்க்கலாம் வாங்க......

Update: 2024-02-20 09:23 GMT

ஆர்எக்ஸ் 100

90களில் இளைஞர்களை கவர்ந்த யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் தற்போது முற்றிலும் புதிய இன்ஜின் உடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் மீது மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளதால் இந்த பைக்கின் விற்பனை மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். யமஹா நிறுவனத்தின் 100 பைக் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்த பைக் என்றே சொல்லலாம்.

ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் இந்த பைக் சென்றால் திரும்பிப் பார்க்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான பைக்காக இந்த பைக் இருந்தது. லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற இந்த பைக் இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த யமஹா ஆர்எஸ்100 பைக்குக்கு இருக்கும் பெயரை பயன்படுத்தி யமஹா நிறுவனம் மீண்டும் தனது ஆர்எஸ்100 பைக்கை ஆர்எக்ஸ் பெயருடன் களம் இறக்க முடிவு செய்துள்ளது. என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள அரசு கட்டுப்பாடான பிஎஸ்6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய இன்ஜின் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால் யமஹா நிறுவனம் 225.9 சிசி திறன் கொண்ட இன்ஜினை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இன்ஜினை தான் தனது ஆர்எக்ஸ் பைக்கில் உட்படுத்த போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்த இன்ஜினை பொறுத்தவரை 20.1பிஎச்பி பவரையும் 19.93என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த பைக் ஆர்எஸ்100 என்ற பெயரிலேயே வரப்போகிறதா அல்லது வேறு பெயர் மாற்றப்பட்டு ஆர்எக்ஸ் என்ற பெயர் மட்டும் மீண்டும் தொடர போகிறதா என்ற விபரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ1.25 லட்சம் முதல் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News