வட மாநில பெண்ணை கொலை செய்த வாலிபர் கைது.

வட மாநில பெண்ணை கொலை செய்த, அசாம் மாநில வாலிபர் கைது.

Update: 2024-01-09 08:41 GMT

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா, மூலிமங்கலம், வள்ளுவர் நகர் தெற்கு, பகுதியில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் வயது 34 இவர் மூலிமங்கலம் பகுதியில் டான்யா பயோ எனர்ஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிந்தாமணிபரோ வயது 44 என்ற அசாம் மாநில பெண் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இதே நிறுவனத்தில் அதே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபோல் முர்மூ வயது 33 என்ற வாலிபர் பணியாற்றி வந்தார். இதனிடையே இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி இரவு 11:45 மணி அளவில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை திருமணம் கொள்ளுமாறு சுபோல் முர்மூ-வை வலியுறுத்தி உள்ளார் சிந்தாமணிபாரோ. இதனால் இருவருக்கும் எழுந்த தகராறில் சிந்தாமணி பரோவை,சுபோல் முர்மூ, கழுத்தை நெரித்து கொலை செய்தார். தனது தாயாரை காணாது தவித்த சிந்தாமணி ப்ரோவின் மகன் தேடிய போது, தனது தாயை கொலை செய்தது தெரியவந்தது, இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஜெயச்சந்திரனிடம் தெரிவித்ததை தொடர்ந்து,அவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிந்தாமணிபரோ உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக கொலை செய்த சுபோல் முர்மூ-வை வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர் 


Tags:    

Similar News