இளைய தலைமுறையினரின் இதய அடைப்பு ?

Update: 2023-10-03 08:42 GMT

மாரடைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இன்றைய இளைய தலைமுறையினரின் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்படுவது மாரடைப்பால்தான்.

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ஏற்படுகிறது.

இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.

இன்றைய இளைஞர்கள் இதயநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம் தான். வீட்டுக்குள்ளேயே முடங்கி டி.வி. பார்ப்பது, சோம்பேறியாக இருந்து காலத்தை வீணடிப்பது, மைதானத்துக்கு சென்று விளையாடுவதைத் தவிர்ப்பது. பலர் இரவில் வெகுநேரம் தூங்காமல் மொபைலை பார்த்துக்கொண்டே காலம் கழிப்பது, இது தவிர சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது, கஞ்சா பிடிப்பது என போதைக்கு அடிமையாகிவிடுவது, வாய் ருசிக்காக கண்ட உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றம் தான் தற்போது அதிக இளைஞர்களை மாரடைப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது.

பொதுவாக மாரடைப்பை எப்படி தவிற்கலாம்?

  • நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
  • இரத்த கொதிப்பு உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
  • அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை குறைப்பு.
  • கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
  • புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும்
  • புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்க்க வேண்டும்
  • மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் இவைகளில் சிலவற்றை பயில வேண்டும் - யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிகளை மேற்கொள்வது உடற்பயிற்சிகள் தொடங்கும் வயது: 2. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்யவேண்டும். சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல்/ நீந்துதல்/ மிதி வண்டிப்பயிற்சி) மேற்கொள்ளவேண்டும்.
  • சமச்சீரான / நல்ல ஆரோக்கியமான உணவுமுறைகள். உணவை மருந்தை போல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிடவேண்டியது இல்லை. கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணெய் குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் நிறைந்த உணவே ஆரோக்கியமானது. மஞ்சள் கரு இல்லாத முட்டை,[சான்று தேவை] வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
  • ஒருதடவை மாரடைப்பு வந்தோர் மீண்டும் மாரடைப்போ அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக இதயத் தேக்கச் செயலிழப்போ வராதிருக்க மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தத் தொடங்குவதுண்டு. இம்மருந்துகளுக்கு ஒவ்வா விளைவுகள் பக்க விளைவுகள் குறிப்பிட்ட நபருக்கு இல்லாதவிடத்து, அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
Tags:    

Similar News