சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் எதை சாப்பிட வேண்டும் ....!
பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ ...என்ற பழமொழிக்கு என்ன பொருள் தெரியுமா ...!
விருந்து என்றாலே இனிப்பு இல்லாமல் எப்போதும் பறிமாறுவதில்லை.இது மரபாகவே பின் பற்றி வருகிறோம்.
சரிங்க ..!இனிப்பு என்றாலே நம் எல்லோருடைய நாவிலும் உமிழ் நீர் சுரக்கும் அல்லவா..! இந்த இனிப்புகளை எப்போதெல்லாம் சாப்பிடலாம் ... ஏன் இதை சாப்டனும்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க ..!
நம்முடைய உணவு முறையேஇனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது.அதாவது, ஒருவர் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு...அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும். ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது ஆரோக்கியமாக ...இருக்க உதவுகிறது. ஒரே மாதிரியான சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் பலவித உடல்நலப் பிரச்சனைகளுக்கு வாழ வழி வகிக்கும் .
தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது...
நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது..