அஞ்சறை பெட்டியின் ஆரோக்கியம்
Update: 2023-10-11 10:30 GMT
இஞ்சி :
இது உடல் சூட்டை அதிகமாக்கி உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பூண்டு:
இது இருதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும் உடலை இளைக்கச் செய்வதற்கும் இது வழிவகை செய்கிறது.
பெருஞ்சீரகம்:
இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதை தேயிலையோடு சேர்த்தும் , தனியாகவோ தேநீர் செய்து பருகி பசியை குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.
மிளகாய் பொடி:
மிளகு மற்றும் மிளகாய் வகைகளில் உள்ள காப்சலின் எனும் பொருள் மிளகாய் பொடியிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வை அதிகமாக வர காரணமாகி நமது உடற் கலோரிகளை சீக்கிரம் எரிக்க உதவுகிறது. தொடர்ந்து உடல் எடையை குறைக்க வல்லது