ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம்

ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2024-10-24 05:33 GMT

ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எரும்பி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் தினந்தோறும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சேகரிக்கும் குப்பை, திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகள் அனைத்தும் அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் கொட்டப்படுகிறது.


இதனால் நீர் மாசடைந்து துர் நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே குப்பை கழிவுகளை கொட்ட மாற்று இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் ஏரியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை அகற்றி சீர்படுத்திட வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடமும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் இதுவரையும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனை உடனடியாக ஏரியில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி மாற்று இடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News