தூக்கமின்மையை துரத்தும் டிப்ஸ்கள் இதோ!...
Update: 2023-10-03 06:33 GMT
ஓயாது உழைத்து தூக்கமின்மையால் அவதிப்படும் தலைமுறையினரும், சமூக வலைதளங்களில் சிக்கித் தூக்கத்தை தொலைத்துவரும் தலைமுறையினரும் தங்களது ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிமுறைகளைக் கையாளலாம்.
- நவீன தலைமுறையினரான நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்களது தொலைபேசியை உங்களிடம் இருந்து சற்று தூரம் தள்ளி வைத்தே படுக்க வேண்டும்.
- தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும்.
- இரவு குளியல் உங்களுக்கு ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்தும்.
- தூங்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
- கண்களை மூடி ஆழமாகச் சுவாசிக்கவும்.
- முழு உடலையும் தளர்த்தி ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
- தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றுங்கள்.
இதனைப் பின்பற்றினாலே தேவையனான அமைதியான தூக்கத்தைப் பெறலாம்.