ஞாபக மறதி பிரச்சனையா?
பொதுவாக கவலைகள் மன அமைதியின்மை பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை ஆகியனவே ஞாபக மறதிக்குக் காரணங்கள் ஞாபக மறதி நீங்கி, நினைவாற்றல் அதிகமாக. கவலைகள் இல்லாதிருக்க வேண்டும் மன அமைதியுடன் வாழவேண்டும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரு வழி உண்டு.
ஞாபக மறதி நீங்க, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் மலம் தங்க விடாமல் எனிமாக் குவளை மூலம் எனிமா எடுத்து வரவேண்டும் பல் துலக்கியபின், வல்லாரை இலைச் சாறு அருந்தி வரலாம்
காலையும் மாலையும் சமையலுணவைத் தவிர்த்து இயற்கை உணவு உண்டு வாழ வேண்டும் பகல் ஒருவேளை மட்டும் சமைத்த சைவ உணவு உண்டு வாழலாம்.
இருவேளைகளும் தண்ணீரில் நன்கு குளிக்க வேண்டும் நாள்தோறும் சிரசாசனம் அல்லது அர்த்த சிரசாசனம. நின்றபாத ஆசனம் சாந்தியாசனம் செய்து வருதல் வேண்டும் நாடி சுத்தி தியானமும் தினமும் செய்து வருதல் சிறப்புடையது.
நினைவாற்றல் அதிகமாக திப்பிலிப் பொடியைத் தேனில் குழைத்துத் தினமும் உட்கொண்டு வரலாம்.