மனத்தக்காளி கீரை அன்றாடம் உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா ??

Update: 2024-10-22 11:04 GMT

மனத்தக்காளி கீரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பசியை அதிகரித்து உடலுக்கு போஷாக்கை வழங்கும். காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.


நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இதன் வற்றல் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை லேசாக நெய்யில் வதக்கிய பின்பு பயன்படுத்தலாம்.

Advertisement

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.


நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம் உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், மலத்தை இளக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம்.

மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது. இந்த கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.



 


Tags:    

Similar News