வெயிட் போட்டுகிட்டே போகுதா? முதல்ல இத பண்ணுங்க!

Update: 2024-05-25 11:31 GMT

உடற்பருமன்

மிதமிஞ்சிய உணவு உண்பதாலும், போதிய உடலுழைப்பு இல்லாததாலும் உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உண்டாகிறது.

அதிகாலையில் எழுந்ததும், வயிறு நிறையக் குளிர்ந்த நீர் அருந்த வேண்டும் பல் துலக்கிய பின், வாழைத்தண்டுச் சாறு அருந்தலாம். இரு வேளைகளும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது பின்னர் யோகாசன பயிற்சிகள் செய்யலாம் காலை, மாலை இருவேளையும் இயற்கை உணவு பகலில் மட்டும் சமைத்த சைவ உணவு சாப்பிடலாம். கொழுப்புச் சத்துள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உண்ண வேண்டாம் உப்பில்லாமல் உண்டு வந்தால், உடல் உப்பாது, இயலவில்லையெனில், மிகக் குறைந்த உபபைப் பயன்படுத்த வேண்டும் தொந்தி கரையப் பசலைக் கீரை சாப்பிட்டு வரலாம்.

அளவுக்கு மேல் உடற்பருமன் உள்ளவர்கள், உடலின் அளவையும் எடையையும் குறைக்கத் தேங்காய்ப் பாலுடன் பழுத்த வாழைப் பழத்தைக் குழைத்துக் கலக்கி புதிய வாழைப் பூவைப் பிழிந்தெடுத்த சாறு ஒரு மேசைக் கரண்டியளவு சேர்த்து, நாளொன்றுக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் உடலில் வேண்டாத ஊளைச் சதை குறையும் இவ்வாறு மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்

இனிப்புப் பொருட்கள் எண்ணெயில் தயாரித்த உணவுகளை அறவே நீக்கிவிட வேண்டும்.

எலுமிச்சம் பழச்சாறு இரு தேக்கரண்டி, தேன் இரு தேக்கரண்டி கலந்து காலை, இரவு இரு வேளைகள் அருந்தி வந்தால், உடற்பருமன் குறையும், தேன் உடலிலுள்ள மிகுதியான கொழுப்பைக் கரைத்து வெளியேற்றுகிறது.

கல்யாண முருங்கையிலைச் சாறு இரு கோப்பை பனை வெல்லம் 600 கிராம் ஆகிய இரண்டையும் அடுப்பில் வைத்துக் காய்ச்சி, பாகுப்பதம் வந்ததும், 50 கிராம தேன் கலந்து ஆற வைத்து ஒரு கண்ணாடிய பாத்திரத்தில் வைக்கவும் நாள் தோறும் காலை மாலை இரு வேளையும் இந்தச் சாற்றில் நான்கு தேக்கரண்டி எடுத்து அரைக் கோப்பை நீரில் கலந்து குடித்து வரலாம்.

மிளகுப் பொடி, காரட சாறு தேன் ஆகிய மூன்றும் கலந்து குடிக்கலாம். பப்பாளிக் காயைச் சமைத்து உண்ணலாம்.

முழுவதும் சமையலுணவு உண்பவராயின் காலை 10 முதல் 11 மணிக் குள்ளும், மாலை 5 முதல் 6 மணிக்குள்ளும் உண்ண வேண்டும் 'போகிக்கு இருவேளை எனும் சித்தாந்தப்படி இரு வேளை உணவு (சமைத்த சைவ உணவு) உண்பதற்கு முன் போதுமான அளவு பழவகைகள் உண்டு, உடன் சமையலுணவு உண்டு வந்தாலும் உடற்பருமன் குறையும் மூக்கரட்டைக் கீரையையும் பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News