உடலுக்கு வலிமை தரும் மூங்கில் அரிசி!

Update: 2024-05-20 09:41 GMT

மூங்கிலரிசி

40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல் இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும். மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப் பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம். அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் இருப்பதற்கு வகையில் இந்த மூங்கில் அரிசியும் ஒன்று. முக்கியமான மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும். மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது;

முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரயேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க ணவுப் பழக்கம்தான். சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.

மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.

1. மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.

2. உடல் வலிமை பெறும்.

3.சர்க்கரை அளவை குறைக்கும்.

4. எலும்பை உறுதியாக்கும்.

5.நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

Tags:    

Similar News