முட்டைகோஸ் சாப்பிடும்போது உஷாரா இருங்க!!

Update: 2025-01-01 07:10 GMT

முட்டைகோஸ்

பச்சை இலை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றன. ஆனால், இவற்றை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் இவற்றை சில சமயங்களில் மிகவும் ஆபத்தாகவும் ஆக்கிவிடுகின்றன.


குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் இந்த பூச்சிக்கொல்லிகளின் மிகவும் பொதுவான பக்க விளைவுகளாகும். இது மட்டுமின்றி, அவற்றை பல நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்வது லுகேமியா மற்றும் லிம்போமா உள்ளிட்ட புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.


சமீபத்திய அறிக்கையில், சுற்றுச்சூழல் பணிக்குழு (EWG) "டர்ட்டி டசன்" ஐ வெளியிட்டுள்ளது. இதில் பூச்சிக்கொல்லி எச்சங்களால் அதிக அளவில் மாசுபட்டு, சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி கூறப்பட்டுள்ளது. கீரையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் ஆர்கனோபாஸ்பேட்டுகள் இருக்கக்கூடும்.


கேல் அதிக பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்ட ஒரு பச்சை இலை வகை. இது செரிமான பிரச்சனைகள் மற்றும் நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். தக்காளிச் செடிகளில் அதிக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.இலை காயான முட்டைகோசிலும் அதிக அளவில் பரவலாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதால், பல வித உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.


இதை தொடர்ந்து உட்கொண்டால், தொற்று, ஒவ்வாமை, அரிப்பு ஆகிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.பூச்சிக்கொல்லிகள் உள்ள காய்கறிகளின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க, அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். மேலும் இவற்றை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சிக்கொல்லியின் தாக்கம் முற்றிலும் நீங்கும்.

Tags:    

Similar News