இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸ் !!
பீட்ரூட்டில் தடகள செயல்திறனை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மற்றும் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும் கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் நைட்ரிக் அமிலமாக மாறி, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராகிறது.இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
பீட்ரூட் ஜூஸ் இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரிப்பதன் மூலம் தசைகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடற்பயிற்சிக்குத் தேவையான ஸ்டாமினாவும் அதிகரிக்கும்.
பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் மிக மிகக் குறைவு. ஒரு கிளாஸ் அளவு இந்த பீட்ரூட் ஜூஸ் குடித்தாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு விடும். அதேசமயம் பசியைக் கட்டுப்படுத்தலாம். ஜீரண ஆற்றலும் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.
பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவையும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் மினரல்களும் அதிகமாக உள்ளன. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவ கால நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.