நன்மை பயக்கும் துளசி !
துளசி:
இது உடல் நலத்திற்கு முக்கியமான மூலிகையாக விளங்குகிறது..
இது பல வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது..
துளசி செடியினை வீட்டின் முன்புறத்தில் வளர்ப்பதன் மூலம் எந்த விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம்..
துளசி செடியை மக்கள் தெய்வமாக போற்றி வந்ததன் காரணம் இதுவே ஆகும்..
விஷங்களை முறிப்பதற்கு துளசி முக்கிய பங்கு வகிக்கிறது..
கோவில்களில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்தை பருகுவோர் உடலில் எந்த நோயும் இன்றி நீண்ட நாள் வாழலாம் என கூறப்படுகிறது...
மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது..
இருமலை குணப்படுத்தும் தன்மையுடையது..
துளசியின் சிறப்பு தன்மைகள்:
உடல்நலத்தில் பங்கு வகிக்கிறது..
பாம்பு கடி விஷத்தையும் முறித்து, விஷம் மேலும் ஏறா வண்ணம் செய்யும் திறனும் இதற்கு உண்டு...
பெரியவர்களுடைய வயிற்றுப்போக்குக்கு இது உதவுகிறது...
மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை துளசிக்கு உண்டு...