கேழ்வரகின் நன்மைகள்...!

Update: 2024-02-21 08:58 GMT

கேழ்வரகின் நன்மைகள்...!

ராகி, அதாவது கேழ்வரகு என்பது ஒரு தானியமாகும்.ராகி தாதுப்பொருட்கள் நிறைந்த தானியமும் ஆகும். கைக்குழந்தைகள், வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ராகி கால்சியத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.  கால்சியத்துடன், ராகியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.ராகியில் உணவு நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உட்கொள்வதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி, தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  உடலில் போதுமான இரும்புச்சத்து கிடைக்காதபோது, இரத்த சோகை பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ராகி சாப்பிடுவது ஒரு சிறந்த வழி. உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ராகியை சாப்பிட வேண்டும்.காலை உணவு அல்லது மதிய உணவில் ராகியைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன.உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக இருக்கிறது.

Tags:    

Similar News