எலுமிச்சையின் நற்குணங்கள் !

Update: 2024-02-05 09:04 GMT

எலுமிச்சையின் நற்குணங்கள் !

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளும் எலுமிச்சம் பழத்தில் உள்ளன. எலுமிச்சை பழம் உணவு வகைகளின் சுவையை அதிகரிக்கும் ஒரு பழமாக உள்ளது. சுவை மட்டுமின்றி இது ஆரோக்கியத்திற்கும் பெரிய வகையில் உதவுகின்றது. இதன் புளிப்பு சுவை உணவிற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளன. இதை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன.

எலுமிச்சை பழத்தை பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஆரோக்கியத்தையும் தற்காப்பு தன்மையும் பலப்படுத்துகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. உடலை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற பருவகால பிரச்சனைகளிலிருந்து உடலை காப்பாற்ற தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.எலுமிச்சை சாறு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நாம் உட்கொள்ளும் உணவு எளிதாக ஜீரணிக்கப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. எடையை இழக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். சில நாட்களில் உடல் எடை குறையும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.எலுமிச்சை சாறு முடி வேர்களை வலுப்படுத்தவும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றின் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

எலுமிச்சை சாற்றில் ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இவை காயங்களை விரைவில் குணமாக்கும், தொற்று ஏற்படுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றும்.

Tags:    

Similar News