தேங்காய் எண்ணெயை இதுக்கெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? நச்சுனு 9 டிப்ஸ் !!
*குளித்து முடித்ததும் சருமத்தில் தேங்காய் எண்ணெயை முழு மாயிஸ்ரைசராக பயன்படுத்தலாம். இது சருமத்தை மென்மையாக மாற்றுவதோடு நல்ல நறுமணத்தையும் தரக்கூடும்.
* நகக்கண் பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவி மென்மையாக மசாஜ் செய்வது நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மென்மையானதாக மாறக்கூடும்.
* சாப்பாட்டிற்கு முன்பு தேங்காய் எண்ணையைக் கொண்டு வாய் கொப்பளிப்பது, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடும்.
* சருமத்தில் ஏதேனும் வெட்டுகள் அல்லது காயங்கள் இருக்கும் பட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவது குணமாகும் பிராசஸை வேகப்படுத்தும்.
* தேங்காய் எண்ணெயை இயற்கை லிப் பாம் ஆக பயன்படுத்தலாம், அதனை உதட்டில் தடவுவது ஈரப்பதத்தை பராமரித்து உதடு வெடிப்பதை தடுக்க கூடும்.
*தேங்காய் எண்ணையைக் கொண்டு உணவுகளை சமைக்க செய்யுங்கள் குறிப்பாக பொறுக்கக் கூடிய உணவுகளில் கட்டாயம் உபயோகிக்க வேண்டும் அவை உணவை சற்று ஆரோக்கியமானதாக மாற்றக்கூடும்.
*தூங்கும் போது பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது எண்ணற்ற நன்மைகளை தர செய்கிறது எண்ணெய் தடவியதும் சாக்ஸ் அணிவது பாதத்தை மென்மையானதாக மாற்றக்கூடும்.
*தேங்காய் எண்ணெயை ஹேர் பேக்கில் பயன்படுத்தலாம் அது கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு பளபளப்பை தரக்கூடும்.
* தினமும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.