உங்களுக்கு ஹீட் உடம்பா ? அப்போ இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க !
ஹீட் உடம்பு இருந்தால் செரிமான கோளாறுகள் ஏற்படும். உடல் வெப்பநிலையை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர், பழச்சாறுகளை குடிக்க வேண்டும். சிலர் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாக உணர்கிறார்கள். சில நோய்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக இது நிகழலாம். பொதுவாக, வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, உடல் சூடு பிரச்சனையை பெரும்பாலானோர் எதிர்கொள்கிறார்கள்.
கொய்யா இலை டீ உடலைக் குளிர்ச்சியாக்கி தேவையான ஆற்றல் உண்டாகும்.
கரும்புச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.
கிவி ஜூஸ் உடல் சூட்டைத் தணிக்கும். தினமும் இந்த ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ எடுத்துக் கொள்வதும் உடல் வெப்பநிலையை சமன்செய்யும்.
தேங்காய் மற்றும் வாட்டர்மெலன் இரண்டையும் சேர்த்து குடிப்பது உடல் சூட்டை குறைக்கும்.
வெள்ளரிக்காயை ஜூஸாக லெமன் சேர்த்து குடிக்க உடல் குளிர்ச்சியடையும்.
இஞ்சி ஜூஸ் 2 ஸ்பூனில் ஒரு எலுமிச்சையின் சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு தணியும்.
மோர் உடலை குளிர்ச்சியாக்கி ஜீரணத்தை மேம்படுத்தும். ப்ரோ பயாடிக் தன்மை அதிகம்.