இந்த பிரச்சனைகள் இருக்கிறதா... அப்போ கரும்பு ஜூஸுக்கு 'NO' சொல்லுங்கள்!!!

Update: 2024-06-04 09:40 GMT

 கரும்புச்சாறு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோடை வெயில் இருந்து நிவாரணம் பெற, நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு நாம் சில பானங்களை குடித்து வருவோம். அதில் ஒன்று தான் கரும்புச்சாறு. கோடை காலத்தில் கரும்புச்சாறை மக்கள் அதிகம் விரும்பி குடிப்பார்கள். அதனுடன் இந்த கரும்பு சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல கூறுகள் நிறைந்துள்ளன. சில நபர் இந்த பானத்தை குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே எந்தெந்த நபர்கள் இந்த சாற்றை குடிக்க கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்..

1.நீரிழிவு நோய் உள்ளவர்கள்: கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது. 240 மில்லி கரும்பு சாற்றில் சுமார் 50 கிராம் சர்க்கரை உள்ளது, இது 12 தேக்கரண்டிக்கு சமமாகும். இதன் கிளைசெமிக் இண்டெக்ஸும் குறைவு. ஆனால் கிளைசெமிக் சுமை அதிகமாக உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் கரும்பு சாற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

2.செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள்: செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள் மறந்து கூட கரும்புச்சாறை உட்கொள்ளக்கூடாது. கரும்பு சாற்றில் காணப்படும் பாலிகோசனால் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடலாம்.

3.தூக்கமின்மை பிரச்சனை: கரும்புச் சாற்றில் காணப்படும் பாலிகோசனால் தூக்கமின்மையை ஏற்படுத்தும். மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் கட்டாயம் கரும்புச்சாறை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

4.தலைவலி மற்றும் சளி உள்ளவர்கள்: கரும்புச்சாறு குடிப்பதால் தலைவலி, சளி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடலாம். ஏனெனில் கரும்பு சாறு குளிர்ச்சி தன்மை கொண்டது.

5.கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்: உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கரும்பு சாறு குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது நல்ல கொலஸ்ட்ராலை கெட்ட கொலஸ்ட்ராலுடன் இணைத்துவிடும்.

Tags:    

Similar News