தலைக்கு குளிச்ச முடி கொட்டுதா ?? பெண்கள் தலைக்கு இப்படி தான் குளிக்க வேண்டும் !!

Update: 2024-11-23 10:21 GMT
hair

தலைமுடி உதிர்தவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் நாம் தலைக்கு குளிக்கும்போது தெரியாமல் செய்யும் சில தவறுகளும். அந்த தவறுகள் என்னனு பார்க்கலாம்.


*கன்டிஷ்னர் தலைமுடி வறட்சியை போக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக கன்டிஷ்னர்கள் பயன்படுத்த கூடாது.


*முகம், தலைமுடி இரண்டுக்கும் ஒரே டவலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


*தலைமுடியை துவட்டும் போது அழுத்தி துவட்ட கூடாது. ஈரமாக இருக்கும்போது அழுத்தி தேய்த்தால் அதிகமாக முடி உதிரும் என்பதை மனதில் வைத்து கொள்ளவேண்டும்.

*தலைக்கு குளிக்கும்போது வெந்நீர் பயன்படுத்தவே கூடாது.


*ஷாம்புவோ கன்டிஷ்னரோ பயன்படுத்தும் போது சரியாக, முழுமையாக தண்ணீர் ஊற்றி அலசாமல் விட்டு விடுவது பொடுகு போன்ற நிறைய பிரச்சினைகள் வரும்.


*தலையில் உள்ள அழுக்குகளை நீக்க மட்டும் ஷாம்பு பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது.

*தலைமுடிக்கு வறண்ட முடியில் ஷாம்பு போடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்.


*ஷாம்பு தேய்த்து தலைமுடியில் அப்ளை செய்து ஊற வைக்க கூடாது உடனே அலசி விட வேண்டும்.

*தலைக்கு குளித்த உடன் சீப்பை வைத்து சீவ கூடாது. அதிகமாக முடி உதிரும். 



 


Tags:    

Similar News