ஆரஞ்சு விதைகளை இனிமே தூக்கி போடதிங்க ? ஆரோக்கியம் இருக்கு !!
ஆரஞ்சு விதைகளிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அதன் விதைகளையும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறுவிதமான நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றை உட்கொள்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை பேணவும் இவை உதவுகின்றன.
ஆரஞ்சு விதைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காணப்படுவதால் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஆரஞ்சு விதைகளின் மறைவான நன்மைகள் இருக்கின்றது.உடலை ஆரோக்கியமாகவும், மீள்திறனுடனும் வைத்திருக்கின்றது.
ஆரஞ்சு விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் செல்களை சேதப்படுத்துவதை தடுக்கும், வீக்கம் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆரஞ்சு விதைகளை உட்கொள்வது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த விதைகளுக்கு தொற்றுநோயைத் தடுக்கும் தாதுக்களை வழங்குகின்து.
இந்த விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.