உபாதைகளை தடுக்கும் இனிமாக் குவளை !
மலச்சிக்கலே அனைத்து நோய்களுக்கும் பிறப்பிடமாகும். காரணம், சல்மத்துண்ணும் பழக்கமும், நார்ச் சத்துள்ள உணவுகளைப் உணவில் சேர்க்காததும் ஆகும். மலச்சிக்கலுக்கும் மலச்சிக்கலை உடனே தவிர்த்து, மலத்தை உடன் வெளியேற்ற, 'எனிமாக் குவளை எனும் எளிய மலிவான சாதனம் பயன்படுகிறது. அருகிலுள்ள இயற்கை மருத்துவ எங்கங்களிலும், சர்வோதயா சங்கக் கதர்க் கடைகளிலும், இயற்கை நலவாழ்வும் பயிற்சி முகாம்களிலும் இதனை விலைக்கு வாங்கலாம்.
இனிமாக் குவளையில் உள்ள பிளாஸ்டிக் குவளையில் சுத்தமான குளிர்ந்து நீரை ஊற்றவும், அத்தண்ணீர் அக்குவளையில் இணைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் மூலம் வெளியேறி, அதன் நுனியில் பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் நாசில் மூலம் வெளியேறும். எனிமா எடுக்க விரும்புவோர், குனிந்து, அல்லது ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அப்பிளாஸ்டிக் நாசிலை ஆசனத் துவாரத்தில் சொருகவும். தேவைப்படின், அந்நாசிலில் தேங்காய் எண்ணெயை சிறிதளவு தடவலாம். நாசிலின் நுனியில் உள்ள துவாரம் மூலம் குவளையில் ஊற்றிய தண்ணீர் ஆசனத்துவாரம் மூலம் மலக் குடலுக்குள் செல்லும். குவளையிலுள்ள தண்னீர் முழுவதும் மலக்குடலுக்குள் சென்றபின், நாசிலை ஆசனத் துவாரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டு, மல்லாந்து சாந்தி ஆசனத்தில் சில நிமிடங்கள் படுத்திருக்கவும். மலம் வெளியேறும் உணர்வு வந்ததும் கழிப்பறைக்குள் சென்று மலத்தையும், தண்ணீரையும் வெளியேற்றலாம். இவ்விதம் பதினைந்து நிமிடங்கட்கொரு முறை வீதம் தொடர்ந்து மூன்று முறைகள் கூட எனிமா எடுக்கலாம் சாதாரணமாக மலங்கழித்த பிறகு எனிமா எடுத்துக் கொள்வது நல்லது.
காய்ச்சல், தலைவலி, மூலம், வயிறு உபாதைகள் உள்ளவர்கள் எனிமா எடுத்தா நிவாரணம் பெறலாம்.