முடி நன்றாக வளர இதை பலோ பண்ணுங்க !!

Update: 2024-07-30 11:41 GMT
முடி டிப்ஸ்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஷாம்புவுடன் எலுமிச்சை சாறு ;

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது. எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள், ஸ்கால்ப்பில் எரிச்சலையும், அரிப்பையும் உண்டாக்கும். வேண்டுமானால் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அதுவும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை மைல்டு ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலையில் தேய்த்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு ;

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பொடுகையும், தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கும். அதற்கு 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.

தயிருடன் எலுமிச்சை சாறு ;

ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்ழுன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இந்த ஹேர் மாஸ்க்கினால் பொடுகு நீங்குவதுடன், ஸ்கால்ப்பிற்குத் தேவையான சத்துக்கள் கிை தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும். இந்த மாஸ்க்கை வாரத் 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

Tags:    

Similar News