அடிக்கிற வெயிலுக்கு எது தொடக்கூடாத உணவு பார்க்கலாமா ?

Update: 2024-05-04 08:57 GMT

கோடை வெயில்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 அடிக்கிற வெயிலுக்கு  தொடக்கூடாத உணவுகளைப் பற்றி பார்ப்போமா.....

1 )காரம்

2) வறுத்த உணவுகள்

3) மதுபானம்

4) காஃபி

5) குளிர்பானங்கள் 


காரமான மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை வெப்ப காலத்தில் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. ஏனெனில், இந்த உணவுகள் நமது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் நீர்ச்சத்து குறையும். இந்த வகை உணவுகளை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும்.

உடலில் நீர்ச்சத்தை குறைத்து உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மது அருந்துவது வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் முற்றிலும் மதுவை தவிர்ப்பது நல்லது.


வெயில் காலத்தில் காஃபி குடிப்பதை குறைப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிதுறைகின்றனர். காஃபியில் உள்ள டியுரெடிக் நீர்ச்சத்தை குறைக்கும். காஃபி குடிப்பது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, வியர்வையையும் ஏற்படுத்தும். பலரும் அலுவலகத்திற்கு சென்றால் காஃபி இல்லாமல் தலைவலிக்கிறது என்று வெயிலையும் பாராமல் குடிப்பார்கள்.அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வெயில் காலத்தில் ஜில்லென்ற உணர்வை ஏற்படுத்துவதால் நமது உடலும் குளிர்ந்து விடும் என நினைத்து குளிர்பானங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். 


கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை வெயில் காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சோடா, எனர்ஜி டிரின்க்ஸ், ஸ்போர்ட்ஸ் டிரின்க்ஸ் போன்ற இனிப்பு சத்து நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை உடலில் நீர்ச்சத்தை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Tags:    

Similar News