தூக்கத்தை தூண்டக்கூடிய உணவுகள் !!

Update: 2024-11-28 12:00 GMT

sleep

வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் இதய ரத்தநாளங்களின் ஆரோக்கியத்திலும், அறிவுத்திறன் செயல்பாட்டிலும் முக்கியப் பங்குவகிக்கின்றன. இவை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.


முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் அதிகமாகக் காணப்படும் "ட்ரிப்டோபன்" என்கிற அமினோ அமிலம், தூக்கத்தை வாரி வழங்கும் தன்மைகொண்டது.


உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன், நல்ல தூக்கத்தைத் தரும் திறன்கொண்டது மாம்பழம்.


உயிரியல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மெலட்டோனின் ஹார்மோன்கள் செர்ரி பழங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்துக்கும், அதிக நேரம் தூங்குவதற்கும் மெலட்டோனின் உதவும்.


ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் பி6 ஆகிய சத்துகள் நிறைந்த மத்தி, சூரை போன்ற மீன்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த வகை மீன்கள் தூக்கத்தை தூண்டக்கூடியவை.



 


Tags:    

Similar News