காலைல எந்திச்சதும் க்ரீன் டீ குடிக்கிர பழக்கம் இருக்கா ?? அட போச்சீ போங்கா.....
காபி, டீ குடிக்க முடியாதவர்கள் கூட கிரீன் டீயை (Green Tea) குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். காரணம், காபி - டீக்கு பயன்படுத்தபடும் தூள் இதில் பயன்படுத்தாமல் தேயிலை பச்சையாக வைத்து தயாரிக்கப்படுகிறது இந்த டீ. இதில் ஆரோக்கியத்துக்கு நன்மையான விஷயங்கள் அதிகம் இருப்பதால் மருத்துவர்கள் கூட கிரீன் டீ குடிக்க அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
டீ, காபியை அடிக்கடி குடித்தாலும் பிரச்சனை, அதனைப்போலவே கிரீன் டீயும் நேரம் வரைமுறை இல்லாமல் குடித்தால் பிரச்சனை. கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், கொழுப்புடன் நேரடியாக ரியாக்ட் செய்யக்கூடியது. இது செரிமானத்தில் பிரச்சனையை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
காலை உணவுக்கு 1-2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம். மதிய உணவுக்கு 1 முதல் 2 மணி நேரம் கழித்து ஒரு கப் கிரீன் டீ குடிக்கவும். ஆக்ஸிஜனேற்ற சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதற்கான சரியான விதி இதுதான். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை உறிஞ்சி செயலிழக்கச் செய்து, அவை சேதமடையாமல் தடுக்கின்றன.
கிரீன் டீயில் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன,இது அசிடிட்டி உள்ளிட்ட வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும். உணவுக்கு இடையில் அல்லது உணவுக்குப் பின் அதை எடுத்துக்கொள்வது சரியான வழிமுறை.
ஒரு நாளைக்கு 1-3 கப் கிரீன் டீ குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு 1 கப் கிரீன் டீ குடித்தால் போதும். எந்த டீயாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளும்போது நிச்சயம் பக்கவிளைவுகள் இருக்கும்.
உதாரணமாக ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் டீ குடிக்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் உங்களுக்கு தூக்க பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. செரிமான ஆகாமல் மலச்சிக்கல், அமில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
அத்துடன் இந்த பிரச்சனைகளுடன் கூடிய பக்கவிளைவுகளை நாட்பட்ட அளவில் எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதனை எல்லாம் நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.