முற்றிலும் குணமாக்கும் மூக்கிரட்டை !!

Update: 2025-01-06 12:15 GMT

health

மூக்கிரட்டை கீரை அந்தளவு சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதனை சாப்பிட்டால் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இந்த இலைகளை நாம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பும் ஆரோக்கியத்தையும் கிடைக்க செய்யலாம். அதிகளவு ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் நிறைந்துள்ள இந்த கீரை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகிறது.

ரத்தத்தில் அதிகளவில் பெருகி இருக்கும் கிரியேட்டினின் அளவை குறைக்க செய்வதில் இதன் பங்கு மிக அதிகம். அதனால் ரத்தம் குறைவாக இருப்போர் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தி அடையும்.


இந்த கீரையின் இலைகள் மற்றும் தண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அந்த நீரானது பாதியாக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் கரைந்து வெளியேறும், வேறு ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் நீங்கும்.

குளிர்ச்சி தன்மை நிறைந்த இந்த கீரையை சுத்தம் செய்து கழுவி அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் மோசமான நிலையில் இருக்கும் மூல நோய் கூட குணமாகும். இந்த கீரையில் அதன் காரணமாக தான் காரம் அதிகம் சேர்க்க கூடாது என்று கூறப்படுகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டோர் இந்த கீரையின் இலைகளை சுத்தப்படுத்தி கீழாநெல்லி இலைகளோடு சேர்த்து அரைத்து குடித்து வந்தால் விரைவில் நோயின் தீவிரம் குறையும். அதே போல் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய ஆற்றலும் இதற்குள்ளது.


மூக்கிரட்டை இலைகளின் வேர்களை காயவைத்து பொடி செய்து அதில் ரசம் வைத்து சாப்பிடலாம், அந்த பவுடரை சுடுதண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். இது கண் சம்மந்தமான நோய்களை தீர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இந்த பொடியை கொண்டு கூட்டு செய்தும் சாப்பிடுவார்கள், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.

இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையினை சீராக வைத்து கொள்ளும். இந்த இலைகளின் பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது, அதனை வாங்கி தினமும் சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் சீரான உடல் எடையினை பெறலாம்.


இந்த இலைகளை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் செரிமான கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும், சருமம் சார்ந்த நோய்களுக்கு தீர்வளிக்கும். இதயம், கல்லீரல், நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது. எனினும், இதனை உட்கொள்ளும் முன்னர் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது நல்லது.

Tags:    

Similar News