நோய்களை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !!

Update: 2024-09-11 12:00 GMT

வீட்டு வைத்தியம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.

வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.

கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது, இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது, இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

Tags:    

Similar News