புது இடத்தில் தூக்கம் வரவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள் !!
நம்முள் பலருக்கும் புதிய இடத்திற்கு சென்றால் அன்று இரவு தூங்குவது மிக கடினமான ஒன்றாக இருக்கும் அதற்கு முதலிரவு விளைவு என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். புதிய இடத்திற்கு சென்று இருக்கும் பட்சத்தில் அங்கு வரும் ஆபத்தினை உணர ஒளி, ஒலி ,தொடுதல் போன்ற உணர்வுகள் உங்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும் வகையில் மூளை செயல்படும் இதன் காரணமாகவே நமக்கு பொது இடத்தில் தூக்கம் வருவதில்லை.
பொது இடத்தில் ஓர் சிறிய சத்தமும் உங்கள் தூக்கத்தை கெடுத்து விட கூடும் அதனால் காதுகளை பஞ்சி வைத்து அடைத்துக் கொண்டோம் காது அடைப்புகளை பயன்படுத்தியோ சத்தத்தை கேட்பதை தவிருங்கள். பொது இடத்தில் ஏற்கனவே மூளை விழிப்புடன் செயல்படும் நிலையில் நீங்கள் டீ, காபி போன்ற பானங்களை குடித்தால் ஒட்டுமொத்த தூக்கமும் சீர்குலையும் எனவே டீ காபி போன்ற காபி பானங்களை தவிருங்கள்.
புதிதாக செல்லும் இடத்தில் கிடைக்கும் தலையணை போர்வைகள் கொண்டு தூங்குவது மிக கடினம் எனவே முடிந்த அளவிற்கு உங்கள் சொந்த உடைமைகளை எடுத்துச் செல்ல முயற்சியுங்கள் பொதுவாகவே நம்முள் பலரும் வெளிச்சமான சூழலில் தூக்கம் வராது அதுவும் புது இடத்தில் வெளிச்சம் நிச்சயம் நமது தூக்கத்தினை பாதிக்கும் எனவே அதனை மறைக்க கண் மாஸ்க் பயன்படுத்துங்கள்.
நீங்கள் புது இடத்தில் உங்கள் வழக்கமான தூக்க நேரத்திற்கு முன்னதாகவே தூங்க சொல்லுங்கள். புது இடத்தில் தூக்கம் வர தாமதமாகும் என்பதால் இது உங்கள் தூக்க நேரத்தை ஈடு செய்ய உதவும் தூக்கம் வரவில்லை என்று கடிகாரத்தை அதிகமாக பார்க்காதீர்கள். இது உங்கள் தூக்கத்தை மேலும் கெடுக்க கூடும் என்று கூறப்படுகிறது. மனதில் வேறு எதனை பற்றியும் சிந்திக்காமல் மனதை அமைதி படுத்த முயற்சிகள் இது நீங்கள் தூங்குவதற்கு பெரிதும் உதவுகிறது.