மீன் சாப்பிட்டால் இந்த உணவுகளை எக்காரணம் கொண்டு சாப்பிடவே கூடாது !!
கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.
இப்படி பல்வேறு நன்மைகளை மீன் நமக்கு வழங்கினாலும் மீன் சாப்பிடும்போது அல்லது மீன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மீன் சார்ந்த எந்த உணவு சாப்பிட்டாலும் முள்ளங்கியை தொடவே கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் உயிரே பறிபோகும் ஆபத்துகள் நிறைந்துள்ளது.
மீனுடன் பால் தயிர் அல்லது பிறப்பால் பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், வீக்கம், வயிற்று வலி, தோல் நோய் தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பசலை கீரையுடன் மீன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பசலை கீரையுடன் எந்த உணவை சாப்பிடாலும் குறிப்பாக மீன் சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்படும். இவை உடலில் உஷ்ணம் உண்டாக்குவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அதிக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளை ஒருபோதும் மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். வறுத்த உணவுகளில் அதிக அளவு நிறைவுற்ற மற்றும் கொழுப்புகள் இருப்பதால் இதை மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
மீனுடன் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள் மீனில் உள்ள புரதங்களுடன் வினைபுரிந்து உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீன் சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீறி சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் அசெளகரியம், வீக்கம் ஏற்படும்.
மீன் சாப்பிட்ட பிறகு பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை எக்காரணம் கொண்டும் சாப்பிட வேண்டாம். அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மீன் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சருமம் மற்றும் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மீனுடன் கிழங்கு போன்ற கனமான மற்றும் மாவு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். செரிமான அமைப்பை மெதுவாக்கும்.