உடலுக்கு நற்பலன்களை தரும் முடக்கத்தான் !!

Update: 2024-09-30 08:30 GMT

முடக்கத்தான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

* முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும வியாதிகளுக்கு நிவாரணம் தரும். 


*மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை ஒரு அருமருந்து என்றே கூறலாம். மூட்டு வலி மட்டுமல்லாமல், சளி, இருமல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.


* முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் தடுத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் குணமாகும்.

* இந்தக் கீரையை அரைத்து சருமத்தில் தடவி வந்தாலும் சரும நோய்கள் தீரும்.


* முடக்கத்தான் கீரையை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு ரசம், சாம்பார் என பலவிதமான பதார்த்தங்களில் சேர்த்து கலந்து விட்டு உண்டு வர பல நற்பலன்களைத் தரும். 


* முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.

* குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை அரைத்து அடிவயிற்றில் பூசினால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ஆரோக்கியமாக இருக்கும்.

* முடக்கத்தான் கீரை வாய்வு தொல்லையை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.

* முடக்கத்தான் கீரை நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகள் வலிமை பெறவும் உதவும்.

* தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடக்கத்தான் கீரை எண்ணெயை நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தயார் செய்யலாம். இந்த எண்ணெயைத் தலையில் அரிப்பு உள்ள இடங்களில் அடிக்கடி தடவி வர, அரிப்பு நீங்கும்.


*இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் முடக்கத்தான் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உட்கொள்ளலாம். 

Tags:    

Similar News