முடி வளர்ச்சிக்கு இந்த பானங்களை பாலோ பண்ண போதும் !!

Update: 2024-08-08 07:30 GMT

முடி வளர்ச்சி

கேரட் ஜூஸ் ;

கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த கேரட்டில் உள்ள பண்புகள் உதவுகின்றன. கேரட்டில் அதிக அளவில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், இது உச்சந்தையில் உள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு உதவுகிறது. இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒரு கண்டிஷனராக நாம் கேரட்டை பயன்படுத்தலாம்.தினசரி நீங்கள் கேரட் ஜூஸை அருந்தலாம். இது முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

பீட்ரூட் ஜூஸ் ;

தினசரி உங்கள் உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்துக் கொள்ளலாம். இது எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் முடி பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

Advertisement

இளநீர் ;

நமது உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதன் காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படுகிறது. இந்த உச்சந்தலையில் ஏற்படும் வறட்சியானது பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக முடி உதிர்வும் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இவை நீர்ச்சத்து குறைபாட்டினை சரி செய்து உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

சோற்றுக்கற்றாழை ஜூஸ் ;

இதில் உள்ள பல பண்புகள் சருமத்திற்கும், முடிக்கும் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. இந்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு மாஸ்காகவும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் இதனை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம். ஜுஸ் தயாரிப்பதற்கு முன்பு நன்றாக சோற்று கற்றாழையை அலச வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். ஒவ்வாமைகள் இருந்தால் இதனை குடிப்பதை தவிர்க்கவும்.

கீரை ஜூஸ் ;

பொதுவாகவே கீரைகளில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகள் நிறைந்துள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. கீரை ஸ்மூத்தி எடுக்கும் போது என்ன மாதிரியான கீரைகள் சேர்க்கலாம் என்பதை நிபுணரிடம் ஆலோசிப்பது நல்லது.

நெல்லிக்காய் ஜூஸ் ;

நெல்லிக்காயில் கூந்தலுக்கும், சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய பல பண்புகள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுத்து முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. உங்கள் தினசரி உணவுகளில் நெல்லிக்காய் ஜூஸை சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் முடி உதிர்வு பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

Tags:    

Similar News