கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான உட்டச்சத்து இது தான் தெரிஞ்சிகோங்க !!
அன்றாட வாழ்க்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாவிடில், வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
இரும்புச் சத்து:
இரும்புச் சத்தை கொடுக்கக்கூடிய ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். வயிற்றில் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இரும்பு சத்துக்கள் அத்தியாவசியமான ஒன்று. மருத்துவர்களின் அறிவுரைகளின் படி, பிரசவ காலத்தில் குறைந்தது 5 மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். இவ்வாறு கர்ப்பிணி சாப்பிடும் நிலையில் பிறக்கும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ள பிறவி ஊனங்களை 70 சதவீத அளவுக்கு தடுத்துவிட முடியும்.
சுண்ணாம்பு சத்து:
உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். சீஸ், யோகர்ட், பால் மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 1,000 மி.கி அளவு சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை பொறுத்து கேல்சியம் மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
வைட்டமின் D :
சுண்ணாம்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் டி உதவும். ஆகையால், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர வைட்டமின் டி தேவை. பால், மீன்கள் மற்றும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெறலாம். மேலும் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு கர்ப்பிணிகள் வாக்கிங் செல்ல வேண்டும்.
புரத சத்துக்கள்:
சிசுசின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. சிசுவின் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து உதவும். கர்ப்பப்பை திசுக்கள் மற்றும் மார்பகங்கள் வளர உதவுவதோடு கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யும். கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 60-100 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.