பனிகால சரும பராமரிப்பு தெரிஞ்சிகோங்க !
வருடந்தோறும் குளிர்காலம் வந்தாலே தோல் இயற்கையான ஈரப்பதத்தை இழக்க செய்யும். அப்போது அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உண்டாகலாம். சில நேரங்களில் இது தடிப்புத்தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி போன்ற இன்னும் பல பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.
குளிப்பதற்கும் கைகளை கழுவுவதற்கும் குறைந்த வெதுவெதுப்பான நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளிருக்கு இதமாக அதிக சூடாக உள்ள நீரை பயன்படுத்த கூடாது.
குளிர்காலங்களில் சூரியனின் தாக்கம் சருமத்தை பாதிக்காது என்று நினைத்து சன்ஸ்க்ரீன் பயன்பாட்டை தவிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பனியிலும் சூரியனின் கதிர்கள் யுவி கதிர்களின் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது.
குளிர்கால சரும பராமரிப்பில் நீங்கள் மாய்சுரைசர் எப்போதும் தவிர்க்க கூடாது. கைகளை கழுவிய பிறகு கூட கைகளை உலர வைத்து பிறகு மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துகொள்கிறது.
குளிர்காலத்தில் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். உள் இருந்து ஈரப்பதமாக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். இதன் மூலம் நீரேற்றமாக இருப்பது வறட்சியை தவிர்க்க உதவும்.
சரும பராமரிப்பில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான குளிர்கால சருமத்துக்கு சரும பராமரிப்பு பொருள்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் தடையை அகற்றாமல் இருக்க மாய்சுரைசர் கொண்ட க்ளென்சர் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
குளிர்காலத்தில் எரிச்சல் இல்லாத ஆடைகளை தேர்வு செய்யுங்கள். பல குளிர்கால துணிகள் வறண்ட தோலை மேலும் மோசமாக்கும். கம்பளி மற்றும் கரடுமுரடான ஆடைகள் குளிருக்கு இதமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் அவை நேரடியாக சருமத்தின் மீது படக்கூடாது. இது வண்றட சருமத்தை எரிச்சல் மற்றும் அரிப்புக்கு அதிக தூண்டுதலை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக மென்மையான சுவாசிக்க கூடிய பொருள்களால் செய்யப்படும் பருத்திஆடைகள் தோலுக்கும் நன்மை செய்யக்கூடியவை.