எலுமிச்சை+அவல் மிக்ஸ் மீல்ஸ்
(ஐந்து நபர்களுக்கு) தேவையான பொருட்கள்
கார் அவல் - 600 கிராம்
எலுமிச்சை - 8
தேங்காய் துருவல் - மூன்று மூடிகள்
பெரிய வெங்காயம் - 2
குடமிளகாய் - 2
இஞ்சி, பூணடு - 25 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
இந்துப்பு - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிது
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிது
செய்முறை:-
கார் அவலை நன்றாகக் கல்நீக்கிச் சுத்தம் செய்து நீர்விட்டுக் கழுவி வடித்து ஊறவைக்கவும். எலுமிச்சைகளைச் சாறு பிழிந்து கொட்டை நீக்கவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி வெட்டவும்.
பூண்டு, இஞ்சியைத் தோல் சீவி வெட்டவும்
கொத்தமல்லி, கருவேப்பிலையைக் கழுவி சிறிதாக வெட்டவும்.
ஊறிய அவலுடன் எலுமிச்சைச்சாறு. தேங்காய் துருவல் தோல் நீக்கிய வேர்கடலை, வெட்டிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, மல்லி, கருவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்புக் கலந்து கிளறினால் சுவையான எலுமிச்சை + அவல் மிக்ஸ் சாதம் சாப்பிட ரெடி.
தேங்காய் சட்னி, யாம் சட்னி, மல்லிச்சட்னி, நெல்லித் துவையலுடன் இணைத்தும் சாப்பிடலாம்.
மதிய உணவிற்கு அவல் தயிர் சாதமுடன் ஏதேனும் மல்லி, அவல் சாதம், அல்லது எலுமிச்சை அவல் சாதம் அல்லது தக்காளி அவல் சாதம் சேர்த்துச் சாப்பிடலாம். வெங்காயம் + வெள்ளரிப் பச்சடி, காரட்+வெள்ளரிப் பச்சடி செய்து இணைத்துச் சாப்பிடலாம்.