இஞ்சியின் மருத்துவ பலன்கள்!

Update: 2024-02-13 08:39 GMT

இஞ்சி 

இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி பல்வேறு நோய்களுக்கு மூலிகை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியை சுக்காகவும், பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் எனப்படும் பொருள், மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது.தசை இறுக்கத்தை தளர்த்தும் ஆற்றல் பெற்ற இஞ்சி,. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தி, மைகிரீன் தலைவலியை குறைக்கிறது.இஞ்சி தேநீர் குடிப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள் வலி, போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். ஒற்றைத் தலைவலியின் பக்க விளைவுகளான, குமட்டல் வாந்தி போன்ற பக்க விளைவுகளையும் இஞ்சி கட்டுப்படுத்தும். தினமும் இஞ்சி டீ அருந்தி வந்தால், உடல் பருமன் பிரச்சனை தீரும்.நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, இஞ்சி பெரிதும் உதவும்.நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், அடிக்கடி சளி இருமல், தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News