மகத்துவமான சங்குப்பூவின் மருத்துவ குணங்கள் !!

Update: 2024-10-05 11:20 GMT

Sangu Poo

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

*சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.


*இதோட இலைய சாறெடுத்து, இஞ்சிச் சாறு சம அளவு சேத்து, கொஞ்சமா கொடுக்க, நுரையீரல் பாதை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும், இளைப்பு நோய் குணமாகும்."

*இதோட வேரை தண்ணியில ஊறவச்சு அந்த தண்ணிய குடிச்சு வந்தா, சிறுநீரை நல்லா பெருக்கும். சிறுநீரகப் பாதையில தொற்றுக்களையும் சரிசெய்யும்.


*இதோட வேர் யானைக்கால் நோய்க்கு மருந்தா பயன்படுது. சங்கு பூக்கள வச்சு தயாரிக்கப்படும் குடிநீர், நீரிழிவு நோயாளிகளோட சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பயன்படுது.


*செரிமான பிரச்சனை, குடற்புழு, வாதம் மற்றும் கப நோய்களுக்கு சிறந்த மருந்தா இதோட வேர் பயன்படுதுன்னு சொல்றாங்க. தோல் நோய்களுக்கும் இந்த செடி சிறந்த மருந்தாகுது."


*சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

*சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக தயிரில் கலக்கி உட்கொள்ள வேண்டும். காலையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.


*யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.

Tags:    

Similar News