வெட்டிவேரின் மருத்துவகுண பயன்கள் !!

Update: 2024-09-17 12:10 GMT

வெட்டிவேர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வெட்டிவேரின் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட்டால் முகப் பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ள பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் மறைந்து விடும். 


வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். 



 



 


Tags:    

Similar News