தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

Update: 2024-08-19 11:30 GMT

தும்மல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தும்மலானது அலர்ஜி, புகை, தூசி போன்றவற்றால் தான் பொதுவாக வரும். இந்த தும்மலானது சோர்வு, மூக்கு ஒழுகல், மூக்கு நமைச்சல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்றவற்றுடன் இணைந்து தான் வரும். தும்மல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சில எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் குணமாகலாம்.

கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.

ஒரு கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் சோம்பை கசக்கிப் போட்டு, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சோம்பை நீரில் சேர்த்த பின் நீரை மீணடும் சூடேற்ற வேண்டாம். அப்படி சூடேற்றினால், அதன் சக்தி போய்விடும்.

1-1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளை வெதுவெதுப்பான நீரில் போட்டு, தினமும் 3 வேளை குடித்து வந்தால், தும்மல் அடங்கும். அதுவே அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால் இருமலுக்கு காரணமான வைரஸ் மற்றும் கிருமிகள் அழியும்.

இஞ்சியை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இஞ்சி சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும்.

Tags:    

Similar News